Idhayam Matrimony

இந்தியாவின் 4 நகரங்களில் தொடங்கியது 5-ஜி சேவை

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
5-G-service 2022-10-05

Source: provided

புதுடெல்லி : 5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5-ஜி சேவையை இந்தியாவில் 4 நகரங்களில் துவங்கியுள்ள ஜியா நெட்வொர்க்.

5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் நேற்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் நேற்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஜியோ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து