முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை: குடியரசு கட்சியினருக்கு ஜோ பைடன் வாழ்த்து

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2022      உலகம்
Joe-Biden 2022 11 17

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை இடங்களை பிடித்த குடியரசு கட்சியினருக்கு அதிபர் ஜோபைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடந்தது. இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. 

இந்த நிலையில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியது. அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 211 இடங்களை கைப்பற்றியது.  இதனையடுத்து குடியரசு கட்சியினருக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு அதன் தலைவர் கெவின் மெக்கார்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினருடன் பணிபுரிய தயாராக உள்ளேன். ஜனநாயக கட்சியினர் அல்லது குடியரசுக் கட்சியினர் என யாராக இருந்தாலும் அவர்கள் என்னுடன் இணைந்து பணிபுரிய ஆவலுடன் இருப்பின், யாருடன் வேண்டுமானாலும் பணிபுரிவேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து