முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி: இங்கிலாந்தை ' ஒயிட் வாஷ் 'செய்தது ஆஸ்திரேலிய அணி

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      விளையாட்டு
Australian-team 2022 11 22

Source: provided

மெல்போர்ன் : இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து 

ஒருநாள் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இங்கி., பீல்டிங்...

மெல்போர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் டிராவிட் ஹெட்152 ரன் குவித்தார். மற்றொரு வீரர் வார்னர் 106 ரன்கள் அடித்தார்.

355 ரன்கள் குவிப்பு...

இதன் மூலம் 48 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 355 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ஸ்டோன் 4 விக்கெட் எடுத்தார். திருத்தப்பட்ட 364 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெசன் ராய் 33 ரன் அடித்தார். வின்ஸ் 22 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.

142 ரன்னுக்கு அவுட்...

 

இங்கிலாந்து 31.4 ஓவர்களில் 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். கம்மின்ஸ், அபோட் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து