முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருப்பு, எண்ணெய் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு புகார்: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Income tax 2022-07-10

Source: provided

சென்னை : பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் 5 நிறுவனங்கள் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழகத்தில் நேற்று 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாமாயில், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு தமிழகத்தில் சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

5 நிறுவனங்களும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு நிறுவனம் தண்டையார்பேட்டையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 7 மொத்த விற்பனை கடைகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது. தண்டையார்பேட்டை சந்தியராயன் கோவில் தெருவில் நிறுவன ஊழியர் ஒருவரின் வீடு உள்ளது. கணக்காளராக பணி புரிந்து வரும் இவரது வீட்டிலும், குடோன் மற்றும் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தி.நகர் மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை அண்ணா சாலையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதே போன்று இன்னொரு நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனை நடந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றன. நேற்று காலை 6 மணியளவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமான வரி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை முடிவில் 5 நிறுவனங்களிலும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா ? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும். இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து