முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து படுபாதாளத்துக்கு போய் விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
EPS 2022-09-19

Source: provided

சேலம் : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து படுபாதாளத்துக்கு போய்விட்டது என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "அரியலூரில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அதேபோல், பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், தொழில்வளம் எதுவும் வரவில்லையென்று, அதனால் தமிழகம் ஏற்றம் பெறவில்லை என்ற கருத்தையும் அரசு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. ஒரு பிரபல பத்திரிகை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் ஆய்வு செய்து, தமிழகம் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதும் எங்களுக்கு வழங்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு முறையாக பேணி காக்கப்பட்டது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்துக் கொண்டிருந்தது. இன்றைய நிலை என்ன? 3 மாதங்களுக்கு முன்பு, சென்னை சுற்றுவட்டாரத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டு பத்ரிகைகளின் வாயிலாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். உடனே காவல்துறை அதிகாரிகள், 36 மணி நேரத்தில் 12 கொலைகள் தான் நடந்தன என்ற விவரத்தைச் சொன்னார்கள்.

36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடக்கிறதென்றால், சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை முதல்வர் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது, படுபாதாளத்துக்கு போய்விட்டது.

தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின்போது , 2138 பேர் பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, முதல்வரே அறிவித்திருக்கிறார். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் வெறும் 148 பேர். அப்படியென்றால், மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை.

சட்டமன்றத்திலேயே இதுகுறித்து நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால்தான் காவல்துறையால் போதைப்பொருட்களை தடை செய்ய முடியவில்லை" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து