எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குமரி : கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை யொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், திருநடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்து பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெற்றது.
தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. நேற்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வருகிற 27-ம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சாஸ்த்தான் கோவில்விளை, செட்டிவிளை உட்பட பல சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அதனை தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது. 30-ம் தேதி (திங்கட்கிழ மை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்