முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது, 

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். பா.ஜ.க.வின் ஆதரவு குறித்து நானும், பா.ஜ.க. தலைமையும் விரைவில் அறிவிப்போம். அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே விருப்பம். 

அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் விருப்பமாக இன்று வரை உள்ளது. தேர்தல் பணிமனை பெயர் மாற்றம் குறித்து அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். இரட்டை இலை சின்னம் கேட்டுவந்தால் நான் கையொப்பமிடுவேன். எங்களை பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளேன். ஒன்றிய பட்ஜெட் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசு ஒதுக்குகின்ற நிதியை தமிழ்நாடு அரசு நாட்டின் சுபிட்சத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். பட்ஜெட்டின் விரிவான அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து