முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்றத்தில் சோழர் கால செங்கோல்: மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

புதன்கிழமை, 24 மே 2023      இந்தியா
amit-shah 2022-12-01

புதுடெல்லி, புதிய பாராளுமன்றத்தில் சோழர் கால செங்கோல் நிறுவப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறியிருப்பதாவது:- டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இணைக்க பாராளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்பட வேண்டியது அவசியம்.

8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது. அந்த செங்கோலை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின்போது பிரதமரிடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து