முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாடினாலும், இல்லை என்றாலும் எப்போதும் சென்னை அணியோடுதான் : கேப்டன் டோனி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

புதன்கிழமை, 24 மே 2023      விளையாட்டு
Dhoni-1 2023-05-24

Source: provided

சென்னை : எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு இருப்பேன் என்று கேப்டன் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் ஆரவாரம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடர் முழுவதும் டோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நோக்கில் ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இறுதிக்கு தகுதி....

அதுமட்டுமின்றி எதிர் அணியின் வீரர்கள் பலரும் சென்னை அணியுடனான ஆட்டம் முடிவடைந்த பிறகு டோனியை சந்தித்து அவர்களின் சட்டை, பேட் உள்ளிட்டவற்றில் டோனியின் ஆட்டோகிராஃப் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முடிவு எடுக்கவில்லை...

இந்த போட்டிக்கு பிறகு டோனி பேசுகையில், ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். “அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா என்பது குறுத்து இதுவரை முடிவெடுக்கவில்லை. அதற்கு இன்னும் 8, 9 மாதங்கள் உள்ளன. டிசம்பர் மாதம்தான் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. அதைப் பற்றி இப்போதே யோசித்து ஏன் தலைவலி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை அணியோடு....

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்ல களத்திற்கு வெளியே ஏதேனும் பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சென்னை அணியோடு இருபேன்” எனத் தெரிவித்துள்ளார். கேப்டன் டோனியின் இந்த பதிலால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து