முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
Student 2023-05-25

Source: provided

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் கடந்த 8-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

இந்த நிலையில் நேற்று  தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி முதல்வர்களும் https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் ஓ.டி.பி.  எண்ணை பதிவு செய்து தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து