முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      இந்தியா
Purandeshwari 2023-09-23

Source: provided

திருப்பதி : விஜயவாடாவில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநில பா.ஜ.க தலைவராக என்.டி. ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவர் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வை வளர்க்க பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதன்படி பிரதமர் மோடியின் பிறந்த நாளை கடந்த 17-ம் தேதி முதல் வருகிற 2-ம் தேதி வரை கொண்டாட மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி தொடங்கி வைத்தார். 

இந்த கண்காட்சியில் பிரதமர் மோடியின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைகள் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

சிறுவயதில் மோடி ஒரு நீர் நிலையிலிருந்து முதலைக்குட்டியை கையில் எடுத்து தைரியமாக பிடித்து வைத்திருப்பது போன்ற படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து