முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு போட்டிகள்: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம் : இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      விளையாட்டு
Asian-Games 2023-09-23

Source: provided

ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இந்திய வீரர்கள் அணிவகுப்பு ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். அவர்களை தொடர்ந்து இந்திய வீரர்கள் அணி வகுத்து சென்றனர்.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் உள ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் துவக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடங்கிய விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.  

ஒலிம்பிக்கிற்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஹாங்சோவ் நகரில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு துவக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து