முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது : ராகுலுக்கு கம்யூனிஸ்டு எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      இந்தியா
CPM- 2023-09-20

Source: provided

திருவனந்தபுரம் : வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது ராகுல் காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டது. 

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார். அதே போல வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். 

இந்த சூழ்நிலையில் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இண்டியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

இந்த முறை வயநாடு தொகுதியை காங்கிரஸ் தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. இதனால் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்ள திட்டமிட்டு உள்ளது. 

மேலும் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்க வேண்டும் என விரும்புவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்து உள்ளன. டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள பிரிவு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து