முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      இந்தியா
Modi-3 2023-09-24

Source: provided

புதுடெல்லி : வந்தேபாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி பேசினார். 

நெல்லை - சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது, 

இன்று ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில மக்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வசதியைப் பெறுவார்கள். இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபலிக்கின்றன. 

25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே 1,11 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். வந்தேபாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ள பல ரயில் நிலையங்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேகம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து