முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
Neet 2023-04-20

Source: provided

கோட்டா:ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கு தயாராவதற்காக வருகை தருகின்றனர். எனினும், அவர்களில் பலர் படித்து வரும் போதே தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து வருகிறது.  படிப்பிற்கான அழுத்தம் மற்றும் மாணவர்களிடையே தோல்வி பற்றிய பயம் ஆகியவையே இதற்கு காரணம் என பலரும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், மற்றொரு மாணவர் கோட்டா நகரில் தற்கொலை செய்து உள்ளார். அவர், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்து, நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் இது 26-வது சம்பவம் ஆகும். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் சேருகின்றனர். எனினும், கடந்த ஆண்டு கோட்டாவில் 15 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்தனர். நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து