முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 56.95 கோடியில் மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-09-29

Source: provided

சென்னை : ரூ. 56.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின்,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனையில் 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம், தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளம் மற்றும் சேதுபவாசத்திரம் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் விதைப் பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிராமத்தில் 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்குடி கிராமத்தில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளங்கள் என மொத்தம் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இவ்விடுதிகளில், பொழுதுபோக்கு அறை, ஓய்வறை, உடற்பயிற்சிகூடம், வாசகர் அறை, உணவுக்கூடம், விடுதி பாதுகாவலர் அறை மற்றும் நவீன கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து