முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகில் பிரிவினைவாதம் அதிகரிப்பு : தலைமை நீதிபதி சந்திரசூட் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Chandrashut 2023 07 31

Source: provided

மும்பை : ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் இந்தியா மேன்மையுடன் செயல்படுகிறது என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், உலகம் முழுவதும் பிரிவினைவாதம் அதிகரிக்க சமூக வலைதளங்களின் வளர்ச்சிதான் காரணம் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;- "உலகம் முழுவதும் இன்று நாம் காணும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை அதிகரித்திருக்கிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் பல நாடுகள் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் அவற்றில் பல நாடுகளால் உண்மையான தன்னாட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. அதே சமயம் இந்தியாவால் அதன் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடிந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா தன்னாட்சி மற்றும் ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் மேன்மையுடன் செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து