முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் அமித்ஷா தலைமையில் 4 மாநில முதல்வர்களின் கூட்டம்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Amit-Shah 2

Source: provided

புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம், ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கூட்டமைப்பின் 26-வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.10) பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், 4 மாநில முதல்வர்கள், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், சிறுதானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், நீர் பங்களிப்பு உள்ளிட்ட முக்கியப் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு மண்டல கூட்டமைப்பின் துணைத்தலைவராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து