எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று சென்னை வருகிறது. 2 நாள் சுற்றுப்பயணத்திற்கு பின் தலைமை செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தும் மத்திய குழுவினர் டெல்லி செல்கின்றனர்.
மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 7-ம் தேதி சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங்,பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வெள்ள சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை தெரிவித்த முதல்வர், நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, மாநில பேரிடர் நிதியாக ரூ.450 கோடியை தமிழகத்துக்கு வழங்க பிரதமர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மத்தியதொழில் முனைவோர் மற்றும் நீர்வளத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சென்னைக்கு நேற்று முனதினம் வந்தார். மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் முடிச்சூர் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று 11-ம் தேதி சென்னை வருகிறது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை அந்த குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து நாளை 12-ம் தேதி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி விட்டு டெல்லி செல்ல குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |