முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த சூர்யகுமார், பும்ரா

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      விளையாட்டு
Suryakumar 2023 08 09

Source: provided

மும்பை : டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை ஐ.பி.எல். அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், பும்ரா சாதனை படைத்துள்ளனர்.

மும்பை வெற்றி...

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. 

7 ஆயிரம் ரன்கள்...

இந்த ஆட்டத்தில் 52 ரன் எடுத்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அது என்னவென்றால் அதிவேகமாக (இன்னிங்ஸ் அடிப்படையில்) 7000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவை முந்தி அவர் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

கே.எல்.ராகுல்...

அதிவேகமாக (இன்னிங்ஸ் அடிப்படையில்) 7000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் (197 இன்னிங்ஸ்) முதல் இடத்திலும், விராட் கோலி (212 இன்னிங்ஸ்) 2ம் இடத்திலும், ஷிகர் தவான் (246 இன்னிங்ஸ்) 3ம் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் (249 இன்னிங்ஸ்) 4ம் இடத்திலும், சுரேஷ் ரெய்னா (251 இன்னிங்ஸ்) 5ம் இடத்திலும், ரோகித் சர்மா (258 இன்னிங்ஸ்) 6ம் இடத்திலும் உள்ளனர். 

5 விக்கெட்டுகள்... 

இதேபோல் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 61, ரஜத் படிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் அடித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முன்னதாக இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் பும்ரா ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணிக்கெதிராக மாபெரும் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஆஷிஸ் நெஹ்ரா... 

அதன் விவரம் பின்வருமாறு: ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணிக்கெதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற தனித்துவ சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஷிஸ் நெஹ்ரா 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதே ஆர்.சி.பி. அணிக்கெதிராக ஒரு பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து