முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் கேப்டன்ஷிப், பந்துவீச்சு படுமோசம் : சுனில் கவாஸ்கர் விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      விளையாட்டு
Gavaskar 2023-10-22

Source: provided

மும்பை : சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் ஹர்திக்கின்  கேப்டன்ஷிப்,பவுலிங் படுமோசமாக இருந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

சென்னை வெற்றி...

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் சென்னை வெற்றி பெற்றது. மும்பை அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஹாட்ரிக் சிக்சர்கள்...

ஏனெனில் சி.எஸ்.கே. பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் வீசினார். அந்த ஓவரில் சி.எஸ்.கே. அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி 6, 6, 6, 2 என ஹாட்ரிக் சிக்சர்களுடன் 20 (4 பந்துகள்) ரன்கள் விளாசி அற்புதமான பினிஷிங் கொடுத்தார். கடைசியில் அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் மும்பை தோல்வியை தழுவியது.

படுமோசமாக... 

இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் படுமோசமாக இருந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். அத்துடன் தம்முடைய முன்னாள் கேப்டனான டோனி சிக்சர்களை அடித்து ஹீரோவாகட்டும் என்ற வகையில் பாண்டியா வேண்டுமென்றே சுமாரான பந்துகளை வீசியதாகவும் விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

கட்டுப்படுத்தியிருக்க.... 

"இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது. குறிப்பாக டோனி சிக்சர்கள் அடிக்கும் விதமான பந்துகளை அவர் வீசினார். ஒரு சிக்சர் பரவாயில்லை. ஆனால் பேட்ஸ்மேன் (டோனி) லென்த் பந்திற்காக காத்திருக்கும்போது அடுத்த பந்தில் பாண்டியா அதையே வீசினார். அதேபோல டோனி மீண்டும் சிக்சர் அடிப்பதற்காக பார்த்துக்கொண்டிருந்தபோது பாண்ட்யா புல் டாஸ் பந்தை வீசினார். அந்த வகையில் இது மிகவும் சுமாரான பவுலிங் மற்றும் கேப்டன்ஷிப். என்னை கேட்டால் ருதுராஜ், ஷிவம் துபேவின் அதிரடிக்கு பின்பு சென்னை அணியை 185 - 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து