முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட ஒதுக்கீடு குறித்த அமித்ஷாவின் பேச்சு: வீடியோவை திருத்தி வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      இந்தியா
delhi-police

Source: provided

புதுடெல்லி : இட ஒதுக்கீடு குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை திரித்து வீடியோ  வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து