முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்சரணுக்கு டாக்டர் பட்டம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Ramcharan 2024-04-16

Source: provided

சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற விஸ்டாஸின் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், புகழ்பெற்ற இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அங்கீகரித்துள்ளது. பல்லாவரம் விஸ்டாஸ் வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 80 தங்கப் பதக்கங்கள் மற்றும் 100 பி எச்.டி பட்டங்களை மாணவர்கள் பெற்றனர்.

கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ராம்சரண் கொனிடேலாவை தேர்ந்தெடுத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ஐசரி கே. கணேஷ், அவரின் அபாரமான திறமையை குறிப்பிட்டு, இன்னும் பெரிய மைல்கற்களை சினிமாவில் அவர் அடைவார் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து