முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீது எத்தனை புகார்கள் தெரியுமா? தமிழ்நாடு தேர்தல் ஆணையம் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Election 2024-04-08

சென்னை, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது சுமார் 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. பிரசாரத்திற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது சுமார் 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது., “பாஜகவிடம் இருந்து பெறப்பட்ட 51 புகார்களில், 38 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியிடமிருந்து பெறப்பட்ட 59 புகார்களில் 51 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக அளித்த புகாரின் பேரில், ராமேஷ்வரம் கஃபே குண்டுவெடிப்பு மீதான சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக பாஜக அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவிஜில் செயலி மூலம் பொதுமக்கள் தெரிவித்த 2,68,080 புகார்களில்  2,67,762 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  92% வழக்குகள் சராசரியாக 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து