முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைண்டர் விமர்சனம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      சினிமா
Finder-review 2024-04-22

Source: provided

குற்றவியல் பட்டம் பெறும் நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை தொடங்குகிறார். அந்நிறுவனம் மூலம், குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரிடம், கொலை வழக்கு ஒன்றில் கொற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் வழக்கு வருகிறது. குற்றமற்ற சார்லியை காப்பாற்ற களத்தில் இறங்கும் நாயகனின் பரபரப்பான துப்பறியும் பயணம் தான் ‘ஃபைண்டர்’.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, படத்தின் அடையாளமாக இருப்பதோடு, தனது நடிப்பின் மூலம் பலமாகவும் பயணித்திருக்கிறார். குடும்ப கஷ்ட்டத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து கலங்கும் இடங்கள் அருமை .

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே குற்றவியல் துறை மாணவர்கள் அத்துறைப்பற்றி கூறும் தகவல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர், கொலை வழக்கின் மர்மங்களை தேடி செல்லும் நாயகனின் துப்பறியும் பயணத்தை பரபரப்பாக மட்டும் இன்றி திரில்லிங்காகவும் நகர்த்தி சென்று ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.

மொத்தத்தில், ’பைண்டர்’ சஸ்பென்ஸ் திரில்லர் படம். அனைவரும் பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து