முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலை.யின் பேராசிரியர் குழு ஆய்வு

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
Koorala-Falls 2024-05-17

தென்காசி, திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்காணிக்கவும் நவீன சென்சார் கருவிகளை பொருத்த வனத்துறை உதவியுடன் குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

தென்காசி குற்றால அருவிகளில் தீடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இது போன்று திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நவீன சென்சார் கருவிகளை மலைப் பகுதிகளில் பொருத்தி, வெள்ளம் வருவதை முன்கூட்டியே கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவீன சென்சார் கருவிகளை அனைத்து அருவிகளின் மேல் பகுதியில் பொருத்த தென்காசி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் நேற்று குற்றாலம் சென்றனர். 

அவர்கள் மலைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு எந்தெந்த இடங்களில் இந்த கருவிகளை பொறுத்தலாம் என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறை குழுவினர் உதவியுடன் அருவியின் மேல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து