முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகோவுக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை: துரை வைகோ

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
Durai-Vaiko 2024-03-24

Source: provided

சென்னை : வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து ம.தி.மு.க . பொது செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாக அவரது மகனும், அக்கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று முன்தினம் இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

ம.தி.மு.க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேலின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக   தலைவர் வைகோ, திருநெல்வேலி சென்றிருந்தார். எதிர்பாராவிதமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் கால்  தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. 

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நேற்று காலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு   வைகோ,   உடல் நலம் பெறுவார்கள்.  வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் துரை வைகோ தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து