Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து சென்னையில் 24-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
DMK-Offces 2023 03 31

சென்னை,  நீட் தேர்வை முறைகேட்டை கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் வரும் 24-ம் தேதி அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வினை 2017-ல் கொண்டு வந்தது முதல் தி.மு.க. கடுமையாக எதிர்த்து வந்தது. தமிழகத்திலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது.

அப்போதெல்லாம் பா.ஜ.க. அரசு தி.மு.க. மட்டும் தான் நீட் தேர்வை எதிர்கிறது என்றும், தமிழகம் மட்டும் தான் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்கிறது என்றும் விமர்சித்து வந்தது. தி.மு.க.வின் போராட்டங்களை விளம்பர அரசியல் என்றெல்லாம் சொல்லி குற்றம் சாட்டியது. 

அதற்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் தான் சமூகநீதியின் தொட்டில்.  சமவாய்ப்பு, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான நீட் தேர்வை இந்தியாவில் தமிழகம் தான் முதலில் எதிர்க்கும் என்பதில் எந்த ஐயமில்லை என்று தெரிவித்து, என்றைக்கும் நீட் தேர்வை எதிர்த்தே தீர வேண்டுமென்று சென்னார். 

ஆனால், தற்போது நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபடிகளை உணர்ந்த பா.ஜ.க.வை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத்த இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர். 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடங்கிய அதிர்வலைகள் இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது.  நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். 

நீட் தேர்வே தமிழகத்துக்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் மத்திய   பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் வரும்,  24-ம் தேதி அன்று காலை 9 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. மாணவர் அணியின் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து