Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மீது தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொள்கிறது : மதுரையில் செல்லூர் கே.ராஜூ பேட்டி

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      தமிழகம்
Sellur-Raju

Source: provided

மதுரை : மதுரை மாநகராட்சி மீது தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொள்கிறது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை  சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-

மதுரையில் அம்ரூத் குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புயல் வேகத்தில் நடைபெற்ற பணிகள் தற்போது மிக தொய்வாக நடைபெறுகிறது. 2021-ம் ஆண்டு முடிவுற வேண்டிய குடிநீர் திட்டம் தற்போது வரை நிறைவு பெறவில்லை. குடிநீர், சாலை, பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்து உள்ளார். மேலும் மழைநீர் வடிகால் வாய்காலை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். 

தமிழ்நாடு ஒரு ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் மறுக்க முடியாது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை. திமுக அரசு அராஜக போக்கோடு கண்மூடித்தனமாக செயல்படுகிறது. இ.பி.எஸ் முதலமைச்சராக இருந்த போது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்றார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா ஜாலிடிரிப் சென்றது போல சைக்கிள், பைக், கார் ஓட்டி சுற்றி வருகிறார். மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சி மீது தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து