எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது, பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகள் தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஜன.9-ம் தேதி அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலினை இணைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று (ஜன.20) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து தமிழக முதல்வர் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) – நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல்:
பொது நுழைவுத் தேர்வுகளுக்கான முன்மொழிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது. மாநில மற்றும் தேசிய கல்வி வாரியங்களால் வலுவான இறுதித் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் ஏற்கெனவே முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது தேவையற்றதும், சுமையாகவும் அமைந்துவிடும்.
நுழைவுத் தேர்வுகள் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்துவதுடன் நிதிச்சுமையையும் ஏற்படுத்தி சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும். இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம்ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது. எனவே, நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கையைக் குறைத்துவிடும்.
நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, இளங்கலை, முதுகலை சேர்க்கைகள் தனி நுழைவுத் தேர்வைவிட பள்ளி இறுதித் தேர்ச்சி மற்றும் இளங்கலை மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
4 வருட (கலை மற்றும் அறிவியல்) பட்டம் பெற்றவர்கள், எம்.டெக், எம்.இ. பட்டப்படிப்பில் சேர்க்கை பெறத் தகுதி 4 ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை எம்.டெக், அல்லது எம்.இ. படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம், மேலும் இதுபோன்ற புதிய ஏற்பாட்டுக்கான தேவையைக் குறித்து கவனமாக மறு ஆய்வு செய்யவேண்டும்.
பல நுழைவு மற்றும் பல வெளியேறும் அமைப்பு என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது, குறிப்பாக, கற்றல் தொடர்ச்சியில் சீர்குலைவு, தற்போதைய அமைப்பு கற்றலின் ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதனை எம்.இ.எம்.இ. சீர்குலைக்கிறது.பாடத்திட்டத்தில் அவ்வப்போது புதுப்பிப்புகள் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நுழையும் மாணவர்களுக்கு கடினமாக்கும். எம்.இ.எம்.இ. முறை இடைநிற்றலை சட்டப்பூர்வமாக்குவதுடன், உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை குறைக்கும்.
எம்.இ.எம்.இ. மாதிரி கல்வி திட்டமிடல் மற்றும் வள ஒதுக்கீட்டை சிக்கலாக்குவதன் மூலம் கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கக்கூடும். வரைவு யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) நெறிமுறைகள்-2025ஐப் பொருத்தவரை, ஏற்புடையதாக இல்லை.
கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமித்தல் (பிரிவு 10.1) :
துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முன்மொழியப்பட்ட அளவுகோல்கள், தொழில்துறை, பொது நிர்வாகம் அல்லது பொதுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த நபர்களை உள்ளடக்கியது மிகுந்த கவலைகளை எழுப்புகிறது. கல்வித்துறைக்கு வெளியே தலைமைப் பதவிகளில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பினும், துணைவேந்தர் பதவிக்கு ஆழ்ந்த கல்வி நிபுணத்துவம் மற்றும் உயர் கல்வி முறை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அளவுகோல்கள் பல்கலைக்கழகங்களை திறம்பட வழிநடத்த தேவையான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகிறோம். கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
துணைவேந்தர் தேடல் குழுவில் மாநில அரசை நீக்குதல் (பிரிவு 10.1.iv):
மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைபை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.
மாறுபட்ட பாடப்பிரிவு ஆசிரியர்கள் (பிரிவு 3.2 மற்றும் 3.3):
இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் கல்வி பின்னணியிலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட், செட் தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்கத் தகுதியுடையவர் என்று வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன. சரியான அடிப்படை பாடப்பிரிவு அறிவு இல்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவர்களுக்கு, குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.
வரைவு விதிமுறைகளில் இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, கல்வி அமைச்சகம் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, வரைவு நெறிமுறைகள் திரும்பப்பெறப்பட்டு, மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய கல்வி அமைச்சரின் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன். இந்த வரைவு விதிமுறைகளை எதிர்த்தும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் உட்பட மேற்கண்ட இரண்டு வரைவு விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் ஜன.9ம் தேதி அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தின் நகல் ஒன்றினையும் மத்திய கல்வி அமைச்சரின் கனிவான பரிசீலனைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைத்துள்ளேன்’ என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி? - இன்று கடைசி ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை
11 Feb 2025அகமதாபாத் : இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இந்தியா அசத்தல்...
-
பஞ்சாப் முதல்வருடன் கெஜ்ரிவால் சந்திப்பு லூதியானா தொகுதியில் போட்டியிட திட்டம்?
11 Feb 2025புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
'வீட்டுக்கு ஒரு ஓட்டு' விஜய்க்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர்
11 Feb 2025சென்னை: 'வீட்டுக்கு ஒரு ஓட்டு' என்ற அடிப்படையில் விஜய் கட்சிக்கு வாக்குகளை கைப்பற்ற பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
நீர் மின் உற்பத்தியில் தமிழக மின்வாரியம் புதிய மைல்கல்
11 Feb 2025சென்னை : மத்திய மின்சார ஆணையத்தில் நிர்ணயித்த மின்னுற்பத்தியை விட அதிக அளவு உற்பத்தி செய்துள்ளது.
-
கேரளாவுக்கு அதிவேக ரயில் தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை
11 Feb 2025திருவனந்தபுரம் : நகர்ப்புற பகுதிகள் மிகுந்த கேரளா மாநிலத்தில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் போக்குவரத்து வசதி தேவையில்லை என்று மெட்ரோமேன்
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
11 Feb 2025புதுடில்லி: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தை பூச திருநாள்: இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
11 Feb 2025சென்னை : தைப்பூச திருநாளை திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
11 Feb 2025காரைக்கால் : இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளர்.
-
குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குகிறது டோரண்ட் குழுமம்
11 Feb 2025அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.
-
அமெரிக்காவில் தொடரும் விமான விபத்துக்கள் - மேலும் ஒருவர் பலி
11 Feb 2025ஸ்காட்ஸ்டேல் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் ஜெட் விமானங்கள் அடிக்கடி வந்து செல்லும்.
-
கஜா புயல் இழப்பீடு கிடைக்காதவர்கள் விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
11 Feb 2025சென்னை: கஜா புயல் இழப்பீடு கிடைக்கவில்லை என்று மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்: இஸ்ரேல் பணய கைதிகள் விவகாரத்தில் ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
11 Feb 2025வாஷிங்டன்: காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய
-
ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் வலைதள கணக்கு
11 Feb 2025சென்னை : நடிகை திரிஷாவின் சமூக வலைதள கணக்கு, இணையக்குறும்பர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
தமிழக அரசு மீது வீண் பழி சுமத்தும் அண்ணாமலையின் பகல் கனவு நிறைவேறாது: அமைச்சர் காந்தி
11 Feb 2025சென்னை : அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
11 Feb 2025தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்
-
லாட்டரி விற்பனையாளர்கள் சேவை வரி கட்ட தேவையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
11 Feb 2025புதுடெல்லி: லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என கூறி அதற்கான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து உள்ளது.
-
மின்விளக்கு பழுது: அரசு நோட்டீஸ்
11 Feb 2025இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.
-
தேர்தல் வியூக மன்னா்களால் பயனில்லை: விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து
11 Feb 2025சென்னை : தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு
-
மதுரையில் தை தெப்பத்திருவிழா கோலாகலம்: தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர்
11 Feb 2025மதுரை : மதுரையில் தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் வலம் வந்து அருள்பாலித்த மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
-
கோர்ட்களில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
11 Feb 2025சென்னை: சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோட்டு மதுரைக்கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
கண்ணியத்துடன் இறக்க காத்திருக்கும் முதல் பெண்மணி காரிபசம்மா
11 Feb 2025தேவநாகரி : கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக
-
தினம் ஒரு உச்சத்தை தொடும் தங்கம்: ஒரு கிராம் ரூ.8060, சவரன் ரூ.64,480
11 Feb 2025சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தினம் ஒரு உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.64480 ஆக விற்கப்பட்டது.
-
ராகுலின் சென்னை பயணம் ரத்து
11 Feb 2025சென்னை : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் ஆய்வு மையம் தகவல்
11 Feb 2025சென்னை: தமிழகத்தில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
-
ஐ.சி.சி. சிறந்த வீரர் ஜோமல் வாரிக்கன்
11 Feb 2025துபாய் : ஜனவரி மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. விருது...