முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன நிலச்சரிவில் சிக்கி 28 பேர் மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      உலகம்
Chinese-landslide-2025-02-0

பீஜிங், சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 28 பேரை தேடும் பணி 2வது நாளாக தொடருகிறது.

ஸிசூவான் மாகாணத்தின் ஜுன்லியன் மாவட்டத்தைச் சேர்ந்த ஜின்பிங் கிராமத்தில் பெய்த கனமழையினால், நேற்று முன்தினம்  (பிப்.8) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியிலுள்ள ஓர் தொழிற்சாலை உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மீட்புப் பணியில் சீனாவின் ஆயுதம் ஏந்திய காவல் படை, தீயணைப்புப் படை, மருத்துவப் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நவீன டிரோன்கள் மற்றும் உயிர்களை கண்டறியும் ரேடார் கருவிகளைக் கொண்டு இடிபாடுகளுள் சிக்கியுள்ளோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நிலச்சரிவினுள் சிக்கி படுகாயமடைந்த 2 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 360க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், கன மழை மற்றும் அப்பகுதியின் புவியியல் சூழல்களினால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவானது அப்பகுதியின் கட்டடங்களை தகர்த்து சென்றதினால் சுமார் 1.2 கி.மீ நீளத்திற்கு அதன் இடிபாடுகளினால் நிரம்பியுள்ளதாக கூறியுள்ளனர்.  மேலும், அந்நாட்டு துணைப் பிரதமர் லியூ குவோசோங் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களின் புவியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறுயிடங்களுக்கு மாற்றப்பட்டு மற்றொரு பேரிடர் தடுக்கப்பட வேண்டும் என சீன பிரதமர் லி கியாங் கூறியிருந்தார். சீனா அந்நாட்டின் பேரிடர் மீட்பு மற்றும் மறு வாழ்விற்காக சுமார் 80 மில்லியன் யுவான் (11 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான பணத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து