எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் கொள்கைகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க அரசு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவரான பதர் கான் சூரி ஜார்ஜ்டவுன் பல்கலையில் படித்துவருகிறார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு பதர் கான் தீங்கு விளைவிப்பதாக கருதி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அவரை நாடு கடத்த முயல்வதாக பதர் கான் சூரியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பதர் கானை வெர்ஜினியாவின் ரோஸ்லினில் உள்ள அவரின் வீட்டில் வைத்து மத்திய புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர்.
தற்போது அவர், லூசியனாவின் அலெக்ஸாண்ட்ராவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குடியுரிமை நீதிமன்ற விசாரணை தேதிக்காக காத்திருக்கிறார்.” என்றார். இதனிடையே பதர் கானை கைது செய்ததற்கான காரணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்வில்லை என்றும், அவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியாது என்றும் பல்கலை. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளைமாளிகை துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் பகிர்ந்துள்ள அறிக்கையில், இந்திய மாணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவரின் நடவடிக்கை அவரை நாடுகடத்தவும் வகை செய்வதாக தீர்மானித்துள்ளார். மாணவர் யூத வெறுப்பை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மாணவர் விசாவில் வசித்து வரும் பதர் கான் சூரி, அமெரிக்க பிரஜையான மாப்ஹேஸ் சலேவை திருமணம் செய்துள்ளார். அவர் ஜார்ஜ்டவுன் பல்கலையின், வெளிநாட்டுச் சேவைப் பள்ளியின் ஒரு பகுதியாக இருக்கும் அல்வலீத் பின் தலால் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் புரிந்துணர்வு மையத்தில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக உள்ளார். ஏற்கனவே இந்திய பல்கலைக்கழகத்தில், அமைதி மற்றும் மோதல் என்ற தலைப்பில் தனது முனைவர் ஆய்வு படிப்பினை முடித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


