முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை எல்லை சாலைத் திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
DCM-2025-05-01

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் செல்லும் கனரக வாகன போக்குவரத்தால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்கு சென்னை எல்லை சாலை அமைக்க தமிழக அரசால் திட்டமிட்டப்பட்டது. 

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. நீளம் அமைக்கப்பட உள்ள இந்த சென்னை எல்லை சாலைத் திட்டத்தில், பகுதி-1 மற்றும் 2 பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை எல்லை சாலைத் திட்டம்- பகுதி-3 பணி தொடக்க விழா வியாழக்கிழமை காலை திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காடுகண்டிகையில் நடைபெற்றது.

இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை, திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை ரூ. 2,689.74 கோடி மதிப்பில் 30.10 கி.மீ., நீளத்துக்கு, சேவை சாலைகளுடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில், பொதுபணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், எம்.எல்.ஏ.க்களான கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து