முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, பராமரிப்பு பணிக்காக பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு -திருச்சி பாசஞ்சர் ரயில் (வண்டி எண்: 56106) இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். இந்த ரயில் ஈரோடு- கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும். கரூர் -திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16844) இன்று (வெள்ளிக்கிழமை) பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு குளித்தலை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயிலானது பாலக்காடு- குளித்தலை இடையே மட்டுமே இயக்கப்படும். குளித்தலை -திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16843) இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி - கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயிலானது கரூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். திருச்சி கோட்டத்தில் திருவாரூர்- கொரடாச்சேரி இடையே நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண்: 76820) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 3,4-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூரில் நிறுத்தப்படும். இந்த ரயிலானது திருச்சி- திருவாரூர் இடையே மட்டுமே இயக்கப்படும். காரைக்காலில் இருந்து வழக்கமாக பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்- திருச்சி டெமு ரயில் (வண்டி எண்:16819) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 3,4-ந் தேதிகளில் காரைக்காலில் இருந்து திருவாரூர் வரை பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயிலானது திருவாரூரில் இருந்து திருச்சிக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து