முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு இந்த வாரம் 1,009 பேருக்கு தொற்று

திங்கட்கிழமை, 26 மே 2025      இந்தியா
china 2025-01-04

புதுடெல்லி, இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி (மே 26, 2025) மொத்தம் 1,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, கோவிட் 19 மாறுபாடுகளான என்பி.1.8.1 மற்றும் எல்எப்.7 ஆகியவை சமீபத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் என்பி.1.8.1 மாறுபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதே நேரத்தில் மே மாதத்தில் எல்எப்.7 மாறுபாட்டால் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர்.

உலக சுகாதார அமைப்பு எல்எப்.7மற்றும் என்பி.1.8.1 துணை மாறுபாடுகளை கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடுகள்  என வகைப்படுத்தியுள்ளது. இவை கவலைக்குரிய மாறுபாடுகள் அல்லது கவனத்துக்குரிய மாறுபாடுகள்  அல்ல என தெரிவித்துள்ளன.  

 கடந்த வார இறுதியில் சுகாதார அமைச்சகம் கொரோனா பாதிப்புகளை மதிப்பாய்வு செய்து, முக்கியமாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளதாகக் கூறியது. தற்போது இந்தியா முழுவதும் 1,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 430 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் மே 19 முதல் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் தற்போது 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 153 பேர் கடந்த வாரம் முதல் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த வாரத்தில் நான்கு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். டெல்லியில் தற்போது பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து