முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவலாஞ்சியில் 353 மி.மீட்டர் மழை பதிவு: சொந்த ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்

திங்கட்கிழமை, 26 மே 2025      தமிழகம்
rain 2023-05-25

ஊட்டி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் (திங்கட்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இருந்தனர்.

மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழைக்கு ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலூர் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். மரங்கள் மின்கம்பிகள் மீது விழுவதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஓயாமல் கன மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில்: அப்பர் பவானி 298, எமரால்டு 182, கூடலூர் 153, சேரங்கோடு 139, பந்தலூர் 137, குந்தா 115, பாடந்தொரை 105, கிளன்மார்கன் 105, செருமுள்ளி 101, ஓவேலி 89, நடுவட்டம் 80, கிண்ணக்கொரை 72, ஊட்டி 71.1, தேவாலா 63, கெத்தை 45, மசினகுடி 36, பர்லியாறு 35, கோடநாடு 32, குன்னூர் 30, கல்லட்டி 20, கோத்தகிரி 16, கீழ் கோத்தகிரி 8.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து