முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வின் தொடர் போராட்டத்தால் ஞானசேகரனுக்கு தண்டனை: இ.பி.எஸ்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க தி.மு.க. அரசு முனைந்தது ஏன்? சார்-ஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது என்று அ.தி.மு.க .பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் நேற்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எந்தவித தண்டனைக் குறைப்புமின்றி ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தண்டனை விவரம் வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க தி.மு.க. அரசு முனைந்தது ஏன்? சார்-ஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்தப் பதிவில், மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அ.தி.மு.க. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அ.இ.அ.தி.மு.க. தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால்தான் யார் அந்த சார் என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து