முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற சிறப்புக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்டியா கூட்டணி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இன்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த விவாகரம் தொடர்பாக இன்டியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

 பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில் தி.மு.க.வும் கையெழுத்திட்ட நிலையில், நேற்று (ஜூன் 3) கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 கூட்டம் குறித்து திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரைன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. பூஞ்ச், உரி, ரஜோரி மற்றும் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக விவாதிப்பது குறித்து கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பாராளுமன்றத்துக்கு பொறுப்பு. பாராளுமன்றம் மக்களுக்கு பொறுப்பானது. அதனால்தான் நாங்கள் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து