முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைதள டி.பி.யை கருப்பு வண்ணத்தில் மாற்றிய ஏர் இந்தியா

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2025-06-12

Source: provided

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தின் அருகில்  விமானம் விபத்துக்குள்ளான நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சமூக ஊடக தளங்களில் தனது சுயவிவரப் படத்தை கருப்பு வண்ணத்தில் மாற்றியுள்ளது.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில், "அகமதாபாத் - லண்டன் கேட்விக் விமானம் AI171, இன்று (நேற்று) விபத்துக்குள்ளானது. இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களை உறுதிசெய்து வருகிறோம், மேலும் விரைவில் கூடுதல் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம்" என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பங்கங்களில் சுயவிவர படத்தினை கருப்பு வண்ணத்தில் மாற்றியுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதேபோல காந்திநகரில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 90 பணியாளர்கள் கொண்ட மூன்று குழுக்கள் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும், வதோதராவிலிருந்து கூடுதல் மூன்று குழுக்கள் திரட்டப்பட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து