முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை

புதன்கிழமை, 18 ஜூன் 2025      இந்தியா
Drone 2023 06 12

Source: provided

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும். இந்த உத்தரவை தொடர்ந்து ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே ஜம்மு காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து