முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். மேலும் கேப்டனாக முதல் போட்டியில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். 

வலுவான நிலையில்...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 

2000 ரன்களை... 

தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 42 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் 127* ரன்கள் எடுத்தன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில் புதிய சாதனை ஒன்றை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்துள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும்.

5-வது வீரராக இடம்... 

டெஸ்ட்டில் கேப்டனாக முதல் போட்டியில் சதம் அடித்த ஷுப்மன் கில் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி முதல்நாளில் 359/3 ரன்கள் குவித்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார்கள். இந்திய வீரர்களில் முதல்முறையாக கேப்டனாகி சதமடித்தவர்கள் வரிசையில் ஷுப்மன் கில் 5-வது வீரராக இடம் பிடித்துள்ளார்.

கேப்படனாக சதம் அடித்தவர்கள்:

1. விஜய் ஹசாரே -164* vs இங்கிலாந்து, 1951, தில்லி.

2. சுனில் கவாஸ்கர் - 116 vs நியூசிலாந்து, 1976, ஆக்லாந்து

3. திலிப் வெங்சர்கார் - 102 vs மே.இ.தீ., 1987, தில்லி.

4. விராட் கோலி - 115 vs ஆஸி., 2014, அடிலெய்ட்.

5. ஷுப்மன் கில் vs இங்கிலாந்து, ஹெடிங்லே, 2025.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து