முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேச விமான விபத்து: உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு

புதன்கிழமை, 23 ஜூலை 2025      உலகம்
Bangladeshi--plane-crashes-

Source: provided

டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்காளதேசத்தில் விமானப்படைக்குச் சொந்தமான எப்.7 பி.ஜி.ஐ. விமானம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்துக்கு உள்ளானது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து டாக்கா அருகே உத்தாரா பகுதியில் பள்ளி மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் மாணவர்கள் 20 பேர் பலியானார்கள். விபத்தில் இறந்த விமானியின் பெயர் லெப்டினன்ட் முகமது டோகிர் இஸ்லாம் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 31 ஆக உயர்ந்து உள்ளது. காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. பலியானவர்களில் 25 பேர் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை் 165 ஆக உள்ளது. அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் இருக்கிறது. விபத்தில் சிக்கிய குழந்தைகளின் உடல்களைத் தேடி அவர்களின் பெற்றோர் ஆஸ்பத்திரிகளில் அலைமோதிய காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து