முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 கோடி இந்தியர்கள் கடனாளிகள் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இவர்களின் கடன் விவரங்கள் குறித்து எம்.பி.க்கள் பாராமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு எழுத்து பூர்வமாக பதிலளித்தது. அதன் விவரம் வருமாறு:- கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி கிரெடிட் தகவல் நிறுவனமான சிபில் தெரிவித்ததின்படி, இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான சராசரி கடன் ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இது 2023-ல் ரூ.3.9 லட்சமாக இருந்தது. ஆனால் இது மொத்த மக்கள்தொகையைக் கருத்தில் கொண்ட சராசரி கடன் அல்ல. மேலும், இந்த கடன்களில் பெரும்பாலானவை உயர் கிரெடிட் மதிப்பெண் உள்ள நபர்களுக்கே வழங்கப்பட்டவை. அவர்கள் பெரும்பாலும் சொத்து உருவாக்க குறித்த கடன்களையே எடுத்துள்ளனர்.

குடும்ப நிதி சொத்துகள் ஜி.டி.பி.யுடன் ஒப்பிடும்போது, 2023-ல் 103.5 சதவீதம் இருந்தது. 2024-ல் 106.2 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இது மக்கள் நிதி நிலை மேம்பட்டிருப்பதை காட்டுகிறது. இந்தாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.61.47 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 10.1 சதவீதம் அதிகம். ஆனாலும், வெளிநாட்டு கடன் ஜி.டி.பி. விகிதம் 19.1 சதவீதம் மட்டுமே என்பதால், இது சீராகவே கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து