முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா அதிபர் புதினுடன் பேச தயார்: ஜெலன்ஸ்கி

புதன்கிழமை, 23 ஜூலை 2025      உலகம்
Jelensky 2024-05-04

Source: provided

கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகின்றது. இந்தப் போரில், இருதரப்பும் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்களைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் முக்கிய அதிகாரிகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் 3-ம் சுற்று நேற்று (ஜூலை 23) நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு, மாஸ்கோவில் இருந்து வருகைத் தரும் குழுவுக்கு, ரஷ்ய அதிபரின் உதவியாளர் விளாதிமீர் மெடின்ஸ்கி தலைமைத் தாங்குகிறார். இதேபோல், உக்ரைன் நாட்டு குழுவுக்கு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் தலைமைத் தாங்குகிறார். கடந்த மே 16 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில், இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இருதரப்பும் தாங்கள் சிறைப்பிடித்த பிணைக் கைதிகளை விடுவித்தனர்.

முன்னதாக, உடனடியாக இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென, போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த போப் பதினான்காம் லியோ, ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் வாடிகன் நகரத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து