முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய நகரங்கள் : உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை

புதன்கிழமை, 23 ஜூலை 2025      உலகம்
World-Bank 2024-02-03

Source: provided

ஜெனீவா : இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும், இது 2070 ஆம் ஆண்டுக்குள் 14-30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது. பெரும்பாலும் நகர்ப்புற விரிவாக்கம், வெள்ள அபாயம் மற்றும் வெப்ப பாதிப்பு உள்ள பகுதிகளில் நடைபெறுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லி, சென்னை, சூரத், லக்னோ போன்ற நகரங்கள் அதிக வெப்ப அலை மற்றும் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன.

வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே இந்த அபாயங்களைத் தடுக்க, 2050க்குள் 2.4 டிரில்லியன் டாலரும், 2070க்குள் 10.9 டிரில்லியன் டாலரும் வீட்டு வசதி, போக்குவரத்து, கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து