முக்கிய செய்திகள்
முகப்பு

கொடிய உயிர் கொல்லியான எயிட்ஸ்க்கு எதிராக தகவமைத்து கொண்ட மனித உடல்

aids 2022 01 10

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு  ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.  இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: