எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'முத்தின கத்தரிக்கா'
'முத்தின கத்தரிக்கா'
'முத்தின கத்தரிக்கா'
இயக்குநர் சுந்தர்.சி யிடம் பல படங்களில், இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட் ராகவன். இவர் தற்போது சுந்தர்.சி நாயகனாக நடிக்க 'முத்தின கத்தரிக்கா'என்ற பெயரில் ஒரு படத்தினை இயக்கிவருகிறார். அதனைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இயக்குநர் வெங்கட் ராகவன்; நான் சுந்தர்.சி சாருடன் பல படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளேன்.
அவர் நடித்தபடங்களின் காட்சிகளையும் நான் இயக்கியிருக்கிறேன். நான் இயக்குனராக மாறிய பின்,எனக்கு இது முதல் படம்,முதல் ஹீரோ, முதல் காட்சி என்கிற ஒரு உணர்வே இல்லை. எல்லாரும் ஒரு குடும்பமாக இணைந்து புதியதாக ஒரு படம் செய்கிறோம் என்கிற உணர்வு தான் என்னிடமிருக்கிறது. சுந்தர்.சி சார் என்னிடம்,விரைவாக ஒரு படத்தினை இயக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.
படம் இயக்கலாம் என்ற முடிவெடுத்தபின் அவரையே நாயகனாக நடிக்குமாறு கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அவருடைய அவ்னி மூவிஸ் மூலமாக இந்தப் படத்தினை அவர் தான் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது பேய்க்கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா ஜானர்-லும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவராத ஒரு ஜானர்-ல் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "வெள்ளிமூங்கா" படத்தினை நானும்,சுந்தர்.சி சாரும் பார்த்தோம். இருவருக்கும் பிடித்திருந்தது.
இதையே தமிழில் ரீமேக் செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்தோம். மலையாளப் படத்தினை முழுமையாக அப்படியே ரீமேக் செய்யாமல் அந்தப்படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து,அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக எடுத்திருக்கிறோம். அதாவது அந்தப்படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் ஒரு ரோடு போட்டிருக்கிறோம். மலையாளப் படத்தின் இயக்குநர் இந்தப்படத்தினைப் பார்த்தால் இப்படி கூட எடுக்கலாமா?என்று யோசிக்கும் அளவிற்கு 'முத்தின கத்திரிக்கா' படத்தினை எடுத்துள்ளோம். நான் இயக்குனர் ஆவதற்கு முன்பே என்னிடம் ஒரு ஐடியா இருந்தது. ஒரு மாடர்ன் பாக்யராஜ் சார் மாதிரி என் படத்தில் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பது தான் அது. அதை இந்தப் படம் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறேன். நான் படத்தின் காட்சிகளை, வசனங்களை எழுதி முடித்த பின் சுந்தர்.சி சாரிடம் காண்பித்தேன். என்னை வெகுவாகப் பாராட்டினார். மேலும் உடனடியாக படப்பிடிப்பினை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் சொல்லிய ஒரு வாரத்தில் நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டோம் .
நடிகர்,மற்றும் தயாரிப்பாளர் என்று வெவ்வேறு நபர்கள் இருந்தால்,அவர்களிடம் தனித்தனியாக நான் சென்று படத்தினைப் பற்றி,காட்சிகளைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் இந்தப்படத்தில் இரண்டும் சுந்தர்.சி சாராக இருப்பதால் எனக்கு எளிதாக இருந்தது. படத்தில் ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தலைப்பிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். ரொம்ப வருடங்கள் திருமணமாகாமல் பேச்சிலராக இருக்கும் இளைஞர்களைத் தான் 'முத்தின கத்திரிக்கா'என்று சொல்வார்கள். கதாநாயகனை இமிடேட் செய்யக்கூடிய இந்தத் தலைப்பிற்கு ஓ.கே சொன்னதற்கே சுந்தர்.சி சார்க்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும் காட்சிஅமைப்பிலோ, வசனங்களிலோ எந்த ஒரு இடையூறும் செய்யாமல் என்னை சுதந்திரமாகச் செயல்படவிட்டார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பினை நாங்கள் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், குற்றாலம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடத்தினோம். 40வயதான அரசியல்வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி,அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாமல் இருக்கையில்,ஒரு கட்டத்தில் ஒரு பெண் மூலமாக அவரது வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வு அவரை,அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது தான் கதை. படம் முழுவதும் இந்த ஒரு கதாபத்திரத்தின் செயல்பாடுகளைப் பற்றியே தானிருக்கும். அவரை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்,அவருடைய எதிரிகள் யார்?அவரால் ஏன் அரசியலில் சாதிக்கமுடியவில்லை என ஒவ்வொரு காட்சியும் அதனைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றது. பாடல் காட்சிகளும் கதையோடு இணைந்து வரும்படியாகப் படமாக்கியுள்ளோம். கதாநாயகனுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நடிகர்,படம் முழுவதும் தோன்றுவார். அந்தக் கதாபத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். அவருடைய அந்த கதாபாத்திரத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல,படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.
படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு தந்தனர். கதாநாயகி பூனம் பஜ்வா மற்றும், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் என,என்னோடு பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் விரைவாகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு இடத்திலும் படத்தின் தரம் குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை,யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில்,அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.
சண்டைக்காட்சியானாலும்,செண்ட்டிமெண்ட் காட்சியானாலும்,காதல் காட்சியானாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்கும். ரசிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அது நிச்சயமாக நிறைவேறும். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது. என்று இயக்குநர் வெங்கட் ராகவன் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
கேரளா, தமிழக பகுதிகளில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
01 May 2025சென்னை: இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மே 15-ம் தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகு
-
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
01 May 2025திருச்சி: கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலி
01 May 2025கீவ்: உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
அட்சய திருதியை நாளில் தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை
01 May 2025சென்னை: அட்சய திருதியை நாளில் 27,440 பத்திரப்பதிவின் மூலம் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இ-பாஸ் சர்வரில் சிக்கல்: நீலகிரி சுற்றுலா பயணிகள் அவதி
01 May 2025நீலகிரி: இ-பாஸ் சர்வரில் திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.
-
திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் மே தின விழாவில் முதல்வர் வேண்டுகோள்
01 May 2025சென்னை: தொழிலாளர்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு தொழிலாளர் தோழர்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்வ
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை, மதுரைக்கு வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
01 May 2025இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
01 May 2025புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய
-
இந்தியாவில் 17 பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்
01 May 2025புதுடெல்லி, இந்தியாவில் 17 பெண் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
-
மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டார்: ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாண்டிங் பாராட்டு
01 May 2025சென்னை: ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
-
தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
01 May 2025ஈரோடு: தொண்டனாகவே இருந்து பணியாற்ற விரும்புவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை: மதுரையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
எந்த மைதானத்திலும் சேஸிங் செய்வது பிடிக்கும்: ஷ்ரேயாஸ்
01 May 2025சென்னை: பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல்.: விக்னேஷ் புதூர் விலகல்
01 May 2025காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.
-
உழைப்பாளர்களக்கு விஜய் மே தின வாழ்த்து
01 May 2025சென்னை, உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
01 May 2025மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.
-
சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தை பெற்றுள்ளோம் சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டி
01 May 2025சென்னை: சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தைப் பெற்றுள்ளோம் என பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.
-
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அதிபர் டிரம்ப்
01 May 2025வாஷிங்டன், இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2025
02 May 2025 -
தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: கில்கிறிஸ்ட் சுளீர்
01 May 2025சென்னை: சி.எஸ்.கே. கேப்டன் தோனி தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
-
மெதுவாக பந்துவீச்சு: ஷ்ரேயாஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
01 May 2025சென்னை: மெதுவாக பந்துவீசியதால் சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐ.பி.எல்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்
02 May 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.