முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலந்தூரில் பிரம்மாண்ட மெட்ரோ ரெயில் நிலையம்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.15 - மெட்ரோ ரயில் செல்லும் இரண்டு பாதைகளும் சந்திக்கும் ஆலந்தூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மிகப் பிரமாண்டமான ரயில் நிலையமாக இதனை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் பாதை மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. 

ஒரு பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து அணணாசாலை வழியாக விமான நிலையம் வரை அமைக்கப்படுகிறது. மற்றொரு பாதை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், கோயம்பேடு வழியாக செயிண்ட் தாமஸ் மலை வரை செல்கிறது. இதில் சுரங்கப்பாதையிலும், மேல் மட்டத்திலும் ரெயில்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் செல்லும் 2 பாதைகளும் சந்திக்கும் முக்கிய இடமாக ஆலந்தூர் சந்திப்பு அமைகிறது. எனவே ஆலந்தூரில் பிரமாண்டமான மெட்ரோ ரெயில் நிலையம் நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது.

இந்த ரெயில் நிலையத்தில் இருந்து கிண்டி, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், விமான நிலையம் ஆகியவற்றுக்கு செல்பவர்கள் ஒரு மட்டத்தில் செல்லும் மெட்ரோ ரெயிலில் செல்ல வேண்டும்.

செயிண்ட் தாமஸ் மலை, கோயம்பேடு, சிட்கோ பயணிகள் மற்றொரு உயரத்தில் போகும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப அங்கு இரட்டை அடுக்கு ரெயில் நிலையம் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இதில் கோயம்பேடு​ செயிண்ட் தாமஸ் மலை பாதைக்கான ரெயில் நிலையம் குறிப்பிட்ட உயரத்திலும், விமான நிலையம்​ அண்ணாசாலை பாதைக்கான ரெயில் நிலையம் மற்றொரு உயரத்திலும் அமைகிறது.

இரண்டு வழிகளில் செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளும் ஒரே இடத்திற்கு வருவதால், பயணிகள் எளிதாக இரண்டு ரெயிலுக்கும் மாறி செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. வெளியேறும் பாதைகளும் ஒரு அடுக்கு ரெயில் நிலையத்துக்கு இரண்டு வீதம் அமைக்கப்படுகிறது.

ஆலந்தூர் ரெயில் நிலையத்தில் 10 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படுகின்றன. இது தவிர தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் 18 அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கான இருக்கைகள், கழிவறைகள், ஓய்வு அறைகள், நவீன வசதியுடன் அமைக்கப்படுகிறது. ரகசிய கேமராக்களும் பொருத்தப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக இந்த இரட்டை அடுக்கு ரெயில் நிலையத்தில் 4 எஸ்கலேட்டர்கள், 4 லிப்ட்கள் அமைக்கப்படுகின்றன. இது தவிர 8 எஸ்கலேட்டர்களும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தகவல் தொடர்பு, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மற்ற வசதிகளும் செய்யப்படுகின்றன. இவற்றை பராமரிக்க ஊழியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்