முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தேர்தல்: வாக்காளர் அட்டை மட்டும் அனுமதி

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.1 - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்காளர் அட்டை மட்டுமே அனுமதிக்கப்படும்​ என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12​ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. புதுக்கோட்டை தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1098 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை போலீசார் வந்துள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நடுநிலையுடன் தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை இடைத்தேர்லில் ஓட்டுப் போடுபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும், ஓட்டுப் போடும்போது தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டுள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டும். வேறு எந்த அடையாள அட்டைகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பணியாளர்களால் வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய த் சிலிப்பை கொண்டு சென்று ஓட்டுப் போடலாம். அனைத்து வாக்காளர்களுக்கும் த் அதிகாரிகள் மேற்பார்வையில் 8​ந்தேதிக்குள் `த்சிலிப்' வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!