முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபிக்கு உகாண்டா அழைப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, ஏப்.1 - நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால் தங்கள் நாட்டில் வந்து தங்குமாறு லிபியா அதிபர் கர்னல் கடாபிக்கு உகாண்டா அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை நடத்தி வருபவர் கர்னல் கடாபி. நீண்ட காலமாக இவர் ஆட்சியில் இருப்பதால் லிபியாவில் வளர்ச்சி திட்ட பணிகளில் முன்னேற்றமில்லை. இதனால் கொதித்தெழுந்த மக்கள் அதிபர் கடாபிக்கு எதிராக மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கடாபிக்கு எதிராக  உள்நாட்டு கிளர்ச்சிப் படைகள் உருவாயின. கடாபி ஆதரவு அரசு படைகளுக்கும் உள்நாட்டு கிளர்ச்சி படைகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானபேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டு கிளர்ச்சி படைகளுக்கு தங்களது ஆதரவு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. கிளர்ச்சி படைகள் திரிபோலியை நோக்கி முன்னேறி வருகின்றன. இதைத் தடுக்க அரசுப் படைகள் கண்ணிவெடிகளை புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் லிபியா வெளியுறவுத்துறை அமைச்சர் மோசா துனீசியாவில் இருந்து இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு அவரை இங்கிலாந்து அதிகாரிகள் விசாரித்தபோது தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், தான் வெளிநாட்டிலேயே தங்கி இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேபோல அதிபர் கடாபியும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுகிறது. அப்படி கடாபி நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால் தங்கள் நாட்டிற்கு வருமாறு உகாண்டா அரசு கடாபிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தங்கள் நாட்டிலேயே அவர் தங்கியிருக்கலாம் என்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும் உகாண்டா அரசு உறுதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்